கடவுளுக்கு பதிலடி கொடுக்கும் டார்வினிசம்...
மதவாதிகளுக்கு பதிலடி.....மற்றும் சில கேள்விகள்
சார்ல்ஸ் டார்வின் தனது கொள்கையை வெளியிட்ட நேரத்தில் மக்களின் நிர்வாகம் ,அரச ஆட்சி போன்ற அனைத்தும் மதவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. சொல்லப்போனால் அவர்கள் மக்களைக் அடிமைகளாக வைத்திருந்தார்கள். எனவே அவர்கள் டார்வினது கொள்கையை மக்கள் நம்பாதிருக்க பல வழிகளில் போராடினார்கள். டார்வினை பலவாறு ஏளனஞ்செய்தனர்.அவர்கள் டார்வினின் புத்தகத்தை காலடியில் மிதித்துக் கொண்டு "இந்த கொடியவன் டார்வினின் பிடியிலிருந்து மக்களைக் காப்போம் என்றும்,கடவுளின் புனிதக் கொள்கையை நிலைநாட்டுவோம்" என்றும் சபதம் செய்தனர்.
அவர்களால் டார்வினை அசைக்கவே முடியவில்லை,காரணம் இறையியல் துறையில் பட்டம் பெற்றிருந்தார், அவரும் ஒரு கிருத்துவர்.
அக்காலத்தில் டார்வினின் கொள்கையை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்கள் ,பட்டிமன்றங்கள் நடைபெற்றன.அதில் சிறப்பு வாய்ந்தது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டிமன்றமாகும்.அதில் வில்பர் போஸ் என்ற ஒரு பாதிரியாரும் ,டார்வின் ஆதரவாளரரும்,அவரது நண்பருமான ஹெக்ஸ்லேயும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வில்பர் போஸ், டார்வினையும் ஹெக்சலேவையும் ஏளனஞ்செய்தார். அவர் ஹெக்ஸலேயே "இவர் பாட்டி வழியில் மனிதக்குரங்கின் வழி வந்தவரா? இல்லை பாட்டன் வழியில் மனிதக்குரங்கின் வழி வந்தவரா?" என்று கேட்டார்.
"நான் ஒரு குரங்கை மூதாதையாக ஏற்பதில் வெட்கப்படவில்லை.ஆனால் உண்மையை மறைப்பதில் தன் திறமையைக் காட்டுகிற ஒரு மனிதனுடன் என்னை இணைப்பதற்கு வெட்கப் படுகிறேன். பாதிரியாரை விட ஒரு மனிதக் குரங்கை மூதாதையாகப் பெறுவதை நான் விரும்புகிறேன்"என்றார்.
அன்று அக்கூட்டத்தின் தீர்ப்பு "எவல்யூசன்" கோட்பாட்டிற்கு வெற்றியாக அமைந்தது.....
சில கேள்விகள்....
ஆதாரங்கள் இல்லாத இந்த மதக்கொள்கைகளில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமா?......
இம்மதங்கள் மனிதனால் உருவாக்கப் பட்டவையே அன்றி, மதங்கள் மனிதனை உருவாக்கவில்லை.
மனிதனைத் தவிர வேறு எந்த ஒரு உயிரும் ,விலங்கும் கடவுளை வணங்குவதில்லை.ஏன்? அவைகளும் கடவுளால் படைக்கப்பட்டவை தானே.....
விலங்குகளிடத்தில் எந்த மத வேறுபாடும் காணப்படுவதில்லை.விலங்குகள் கடவுளுக்கு பலி கொடுப்பதில்லை.
மனிதன் பேசுவதற்கு கற்றுக்கொள்ளும் முன் எந்த மந்திரங்களையும் உச்சரிக்கவில்லை.அப்போது அவனிடத்தில் எந்த மதமும் இருக்கவில்லை...
பிறந்தவுடன் எந்தக் குழந்தையும் கடவுள் பெயரை சொல்வதில்லை...அக்குழந்தைக்கும் "கடவுள்" பெற்றோர் மூலமாகவே அறிமுகம் ஆகிறார்.....
Comments
Post a Comment