கடவுள் எப்படி உள்நுழைந்தார்... டார்வின் விளக்கம்


கடவுள் எப்படி உள்நுழைந்தார்... டார்வின் விளக்கம்

மனிதன் ஏன் இயற்கை தேர்வு  கொள்கையை ஏற்க மறுக்கிறான்?




  1. மனிதன் தன்னை ஒரு குரங்குடன் இணைத்து உறவு கொண்டாட விரும்பவில்லை 
  2. மனிதன் தன்னை கடவுளின் பிம்பம் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறான்.
  3. மனிதன் தன்னை தாழ்வகை உயிரினங்களிலிருந்து உண்டாகினோம் என்பதை ஏற்றுக் கொள்வதை கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறான்.
  4. தன்னை உயர்வாக காட்டிக் கொள்வதற்காகவே கடவுளின் குழந்தை என்று கூறிக்கொள்கிறான்.
  5. மனிதன் தன்னை கடவுளுடன் தொடர்புபடுத்தி தெய்வத்தன்மை பெற்றவனாக காட்டிக் கொள்கிறான்.மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை .

கடவுள் உள்புகுத்தப் பட்டார் 

    இவ்வாறாக உருவான கடவுளை மனிதன் தன் தலைமுறைக்கும் போதிக்கிறான்.
"கடவுள் நம்பிக்கை, இளங்குழந்தைகளின் மனதில் ஓயாது புகுத்தப்பட்டது என்பது மறைக்க முடியாத உண்மை" என்கிறார் டார்வின்.
       சிறு வயதிலேயே புகுத்தியதன் விளைவாக வளர்ந்த பிறகு கடவுள் நம்பிக்கை வலிமையுடையதாகிறது.
        குழந்தைகள் தன்  சிறுவயதிலேயே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் மனம் எதுவும் எழுதாத வெற்று காகிதம் போலிருக்கும். பெற்றோர்கள் அச்சிறுவயதிலேயே அந்த காகிதத்தில் கடவுள் பெயரை எழுதுகின்றனர்.
         எனவே அக்குழந்தை கடவுள் நம்பிக்கையுடனேயே வளர்க்கப் படுகிறது.வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கை வலிமையானதாகிறது. இதனால் வளர்ச்சியடைந்த அக்குழந்தையின் மனதிலிருந்து அந்த மூட நம்பிக்கையை அகற்றுவது மிகவும் கடினமான விஷயம்.
"இளமையில் பாம்பினை பார்த்ததன் விளைவாக ஒரு குரங்கிற்கு ஏற்பட்ட பயம்,வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை எப்படி நீக்க முடியாதோ? அதேபோலத்தான் இளமையில் குழந்தைகளுக்கு புகுத்தப்பட்ட கடவுள் நம்பிக்கையை பிற்காலத்தில் அவர்களால் தூக்கி எறிந்துவிட முடியாது" என்கிறார் டார்வின்.
  இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வரும் பழக்கம் குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
   இப்போதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மூட நம்பிக்கையை ஊட்டியே வளர்க்கின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மை.

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download