மனிதன் குரங்கின் வம்சமல்ல!!!!

மனிதன் குரங்கின் வம்சமல்ல!!!!


              சார்ல்ஸ் டார்வின் தனது "உயிரினங்களின் தோற்றம்" என்ற நூலை வெளியிட்ட போது அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது. அதனால் பல போராட்டங்கள் ஏற்பட்டன. டார்வினின் கருத்துப்படி உயிரினங்களனைத்தும் இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவையே....


            அவர் வெளியிட்ட மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றிய கொள்கை மதவாதிகளின் கோபத்தை அதிகமாக்கியது .அவர் மனிதன், குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து  பரிணாம வளர்ச்சி பெற்றான் என்றார்.
 மதவாதிகள் "கடவுளின் மூலம் சிறப்பான முறையில் படைக்கப்பட்ட நாம், ஒரு குரங்கின் வம்சமா?" என்று வியந்தனர். அவர்கள் டார்வினை "குரங்கின் வழி வந்தவன்" என்றும், "சாத்தான் " என்றும் தூற்றினார்கள். ஒரு கிறிஸ்தவ திருச்சபை டார்வினை குரங்குடன் இணைத்து ஓவியத்தை வெளியிட்டு ஏளனஞ்செய்தது.

                    டார்வின் இவற்றை கண்கொள்ளக்கூட இல்லை. ஆனால் டார்வின் நேரடியாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று கூறவில்லை. குரங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர்கள் (common ancestor)  என்றே கூறினார் .டார்வின் இதை வெறும் யூகத்தைக் கொண்டு கூறவில்லை.அவர் இதற்கான ஆதாரங்களை சேகரித்து அவற்றைப் பல ஆய்வுகள் செய்த பிறகே வெளியிட்டார்.

டார்வின் வாழ்ந்த காலத்தில் DNA , ஜீன் போன்ற காரணிகளைப் பற்றி  அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்றைய நவீன அறிவியல் யுகமானது DNA மற்றும் ஜீன்களை துல்லியமாக ஆராய்ந்து ,டார்வினின் கூற்றில் உண்மை இருப்பதை நிரூபிக்கிறது.

ஒரு மனிதனின் DNAவும் ,ஒரு சிம்பன்சியின் DNAவும் 99% ஒத்திருப்பதை மூலக்கூறு அறிவியல் தெரிவிக்கிறது. டார்வின் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இது அவருக்கு மேலும் வலு சேர்த்திருக்கும்......

Comments

Post a Comment

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download