தலையில் கைவைத்த குரங்கு...சொல்லும் டார்வின்

மது குடித்த பிறகு தலையில் கைவைத்த குரங்கு... சொல்லும் டார்வின் 

  டார்வின் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றான் என்று கூறிய கருத்தை மத நம்பிக்கையுடையவர்கள் ஏற்க மறுத்தனர்.
    அவர்கள் "மனிதனை குரங்கினுடன் ஒப்பிடுவதா!  மனிதன் சிறப்பான பண்புகளை உடையவன். மனிதன் செய்பவற்றையெல்லாம் குரங்குகளால் செய்ய முடியாது. அவ்வாறிருக்க மனிதனையும் குரங்கையும் எவ்வாறு தொடர்புபடுத்தமுடியும்"  என்ற வாதத்தை முன்வைத்தனர்.
  இதற்கும் டார்வின் தக்க விடையளித்தார்.
குரங்குகளும் மனிதர்களை போலவே தேநீர் ,மது போன்றவற்றை அருந்துகின்றன.

மது அருந்திய குரங்கு 

  உராங்குட்டான் எனும் ஒரு வகை குரங்கிற்கு ஒரு குவளையில் மது கொடுக்கப் பட்டது. அது நிறைவாக குடித்தது.

மறுமுறை மது கொடுக்கப்பட்ட போது அந்த குரங்கு , கிண்ணம் வைக்கப்பட்ட பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை. அதனருகே கிண்ணத்தை நீட்டினாலும் அது குடிக்க மறுத்து விட்டது.

தலையில் கைவைத்த குரங்கு

  பபூன் என்னும் ஒரு வகை குரங்கிற்கு "பீர்" என்னும் மதுபானத்தை கொடுத்தனர்.அது மகிழ்ச்சியுடன் குடித்தது.
  ஆனால் குடித்து முடித்த பின்னர் அது தனது தலையில் கைவைத்து ஓரமாக போய் உட்கார்ந்து விட்டது.


    மறுமுறை பீர் கொடுத்தபோது அது கிண்ணத்தை தட்டிவிட்டது.

டார்வின் இந்த ஆய்வை எடுத்துக்காட்டி குரங்குகளுக்கு மது குடிப்பதினால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்துள்ளது. அது குடிக்க தகாதது என்று அவைகளுக்கு தெரிந்துள்ளது என்று கூறி இந்த விஷயத்தில் மனிதர்களை விட குரங்குகள் சிறந்தவை என்று விளக்கமளித்துள்ளார்.
  மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் உறவு உள்ளது என்பதை ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download