கடவுளை வென்ற டார்வினிசம்....
டார்வினிசம் - சார்லஸ் டார்வின்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்க்கை அறிவியலாளர் சார்லஸ் டார்வின். இவர் சிறுவயதில் இருந்தே இயற்கையின் மீதும் உயிரினங்களின் மீதும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் . அவர் 1828-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் நிலவியல்(geology ),தாவரவியல் ,விலங்கியல் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அப்போது அவருக்கு அங்கு பணியாற்றிய தாவரவியல் பேராசிரியர் ஜான் ஹென்சுலோ என்பவற்றின் நட்பு கிடைத்தது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு "HMS பீகிள்" என்ற கப்பலில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .
அவர் அந்த கப்பலில் ஆய்வுப் பணிக்காக 5 ஆண்டுகள் பயணம் செய்தார். டார்வினின் அப்பயணமே அவரின் வாழ்வில் மிகப்பெரும் அடித்தளம் உருவாக காரணமானது . இப்பயணத்தின் மூலம் முற்காலத்தில் வாழ்ந்த பல வகையான உயிரினங்களின் படிமங்களைக் கண்டார்,அவற்றை சேகரித்தார்.உயிர் வாழக்கூடிய உயிரினங்கள் தாங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப மாறுபட்டிருப்பதைக் கண்டார்.

உயிரினங்கள் தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கிறன என்றும்,அவை இயற்க்கையாகவே தகவமையும் பண்பைப் பெற்றிருக்கின்றன என்றும் டார்வின் தெரிவித்தார்.
ஆனால் பலர் உயிரினங்கள் ஆரம்பகாலத்தில் இருந்து மாறுபாடடையாமல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவை கடவுளால் படைக்கப் பட்டவை என்ற கருத்து எல்லோராலும் ஏற்கப்பட்டு இருந்தது.அதனால் மக்கள் "உயிரினங்கள் மாறக்கூடியவை ,அவை கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல" என்ற உண்மையை நம்ப மறுத்தனர்.
கடற்பயணத்திற்குப் பிறகு தான் சேகரித்த ஆதாரங்களை பல ஆய்வுகள் செய்த பிறகு தனது "இயற்கைத் தேர்வு" என்ற கோட்பாடை "உயிரினங்களின் தோற்றம்" என்ற நூலின் வாயிலாக 1859-ல் வெளியிட்டார் .இது கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருந்த மதவாதிகளுக்கு பேரிடியாக அமைந்தது.டார்வினின் இந்த புத்தகம் படைப்புவாத கொள்கையை தகர்த்தது. பலர் டார்வினை எதிர்த்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நூல் டார்வினின் 40 ஆண்டுகால உழைப்பை எடுத்துக் கொண்டது.
டார்வின் தனக்கு இத்தகைய எதிர்ப்புகள் இருக்கும் என்று அறிந்தும் துணிவுடன் நூலை வெளியிட்டார்.டார்வின் இந்நூலுக்காக ஆதாரங்களை சேகரிக்க துவங்கிய ஆண்டு 1832.டார்வின் வாழ்ந்த போதே இந்நூல் பலரால் வாசிக்கப் பட்டது.வெளியாகிய அன்றே நூலின் அனைத்துப் பிரதிகளும் விற்பனையாகி விட்டன.இது டார்வினின் உழைப்பிற்கும் துணிச்சலுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி......
Comments
Post a Comment