"இயற்கைத்தேர்வு" சரியானதுதானா?... டார்வினின் விளக்கம்

"இயற்கைத்தேர்வு" சரியானதுதானா?....

      சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வுக் கோட்பாட்டை முன்வைத்தார்.அவர் தனது நூலுக்கு வைத்த பெயர் "இயற்கை தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்" ஆகும். டார்வின் உயிரினங்களின் தோற்ற வளர்ச்சியில் "இயற்கை தேர்வு மற்றும் மாற்றங்கள்" என்னும் இரு கூறுகள் செயல்படுகின்றன என்றார்.
       மதவாதிகள் இயற்கைத்தேர்வு என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி  "தேர்வு என்பது உணர்ந்து செய்யப்படுவது. இயற்க்கை எதையும் உணர்ந்து செய்வதில்லை" என்று வாதிட்டனர்.
ஆனால் டார்வின் இதற்க்கு சரியான விளக்கமளித்தார்.

          "நான் பயன்படுத்தியுள்ள இயற்கைத்தேர்வு என்ற வார்த்தைகள் பொருத்தமானவைகள் அல்ல என்று சிலர் குறை கூறுகின்றனர்.
  வேதியியலில் உள்ள பலவகைப்பட்ட தனிமங்களின் தேர்ந்தெடுத்த நாட்டம், கவர்ச்சி போன்றவையும். குறிப்பிட்ட தனிமங்கள் சில தனிமங்களுடன் தான் இணையும் என்று கூறுகிறார்கள்.இதற்க்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
தனிமங்களுக்கு தேர்ந்தெடுத்து கவரும் பண்பு ,உணர்ந்து செயல்படும் பண்பு உண்டா? என்று கேட்டு ,இயற்கையை உருவகப்படுத்துவதில் தவறில்லை"என்கிறார்.
          மேலும் சார்ல்ஸ் டார்வின் "இயற்கைத்தேர்வு" என்ற வார்த்தையை உபயோகித்ததன் காரணம் 'இயற்கைத்தேர்வையும் செயற்கைத்தேர்வையும் வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகத் தான்'.



        இன்று நாம் காணும் வீட்டு விலங்குகளான நாய்,பூனை ,ஆடுகள்,மாடுகள் போன்றவையெல்லாம் மனிதனால் செயற்கையாக தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவை. இவைகளெல்லாம் காட்டு நாய் ,காட்டுப் பூனை போன்ற காட்டு விலங்குகளிலிருந்து மனிதனால் தேர்ந்தெடுத்து வளர்க்கப்பட்டு உருவானவை. இதை செயற்கைத்தேர்வு என்பர்.

          இயற்கைத்தேர்வு என்பது இயற்கையானது வாழ  தகுதியான உயிரினங்களை தேர்ந்தெடுத்து வாழவைக்கிறது. வாழத்தகுதில்லாத உயிரினங்களை நீக்குகிறது.
     இயற்கையானது காத்தலையும் ,அழித்தலையும் செய்கிறது. எனவே கடவுள் இதை செய்கிறார் என்பது ஏற்கத்தகாதது...

     மேலும் இயற்கைத்தேர்வு மற்றும் செயற்கைத்தேர்வைப் பற்றி பின்னர் விரிவாக காண்போம் .....

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download