கடவுள் எப்படி உள்நுழைந்தார்... டார்வின் விளக்கம்
கடவுள் எப்படி உள்நுழைந்தார்... டார்வின் விளக்கம் மனிதன் ஏன் இயற்கை தேர்வு கொள்கையை ஏற்க மறுக்கிறான்? மனிதன் தன்னை ஒரு குரங்குடன் இணைத்து உறவு கொண்டாட விரும்பவில்லை மனிதன் தன்னை கடவுளின் பிம்பம் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறான். மனிதன் தன்னை தாழ்வகை உயிரினங்களிலிருந்து உண்டாகினோம் என்பதை ஏற்றுக் கொள்வதை கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறான். தன்னை உயர்வாக காட்டிக் கொள்வதற்காகவே கடவுளின் குழந்தை என்று கூறிக்கொள்கிறான். மனிதன் தன்னை கடவுளுடன் தொடர்புபடுத்தி தெய்வத்தன்மை பெற்றவனாக காட்டிக் கொள்கிறான்.மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை . கடவுள் உள்புகுத்தப் பட்டார் இவ்வாறாக உருவான கடவுளை மனிதன் தன் தலைமுறைக்கும் போதிக்கிறான். " கடவுள் நம்பிக்கை, இளங்குழந்தைகளின் மனதில் ஓயாது புகுத்தப்பட்டது என்பது மறைக்க முடியாத உண்மை " என்கிறார் டார்வின். சிறு வயதிலேயே புகுத்தியதன் விளைவாக வளர்ந்த பிறகு கடவுள் நம்பிக்கை வலிமையுடையதாகிறது. குழந்தைகள் தன் சிறுவயதிலேயே கற்றுக...