மூளையுள்ள தாவரங்கள் ....Thinking Plants....

மூளையுள்ள தாவரங்கள் ....

  தாவரங்களுக்கு மூளை இருக்கிறதா ? ஆச்சரியமாக உள்ளதா !

ஆம். இருக்கிறது. இதை பற்றி கொஞ்சம் விரிவாக காண்போம்.
 
                       தாவரங்களுக்கும் மற்ற விலங்குகளைப் போலவே உயிரும், உணர்வுகளும் இருக்கின்றன என்று சொன்னவர் டாக்டர் சர் ஜெகதீஸ் சந்திர போஸ். அவர்  தாவரங்களும் நம்மைப் போலவே எல்லாவற்றையும் உணர்கின்றன என்றும் அவைகளுக்கும் பயம் ,வலி போன்ற உணர்ச்சிகள் இருப்பதை நிரூபித்துக் காட்டினார். 
  ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே சார்லஸ் டார்வின் தாவரங்கள் எல்லாவற்றையும் உணர்கின்றன என்பதை அறிந்திருந்தார். அவர் "தாவரத்தின் ஒரு வேர் முனையின் செயல்பாடு, ஒரு சிறிய விலங்கின் மூளையின் செயல்பாட்டுக்கு இணையானது" என்கிறார்.
     தாவரங்களைப் பற்றி சார்ல்ஸ் டார்வின் அன்று கொண்டிருந்த கருத்தை நிரூபிக்கும் விதமாக நமக்கு இன்று பல்வேறு தடயங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
  இத்தாலியைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்டீவன் மாங்குசோ  டார்வின் கருத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு தாவரத்தின் ஒரு வேர்முனை வெளியிடும் சிக்னல்களும், சிறிய விலங்கின் மூளையிலிருந்து வெளிப்படும் சிக்னல்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வின் மூலம் விளக்கியுள்ளார்.
   மேலும் அவர் தாவரங்களும் மற்ற விலங்குகளைப் போலவே சிந்திக்கின்றன, உணர்கின்றன என்கிறார்.
   மேலும் தாவரங்களுக்கு நம்மைப் போலவே ஒரு மூளை இருந்திருந்தால் அவைகளும் நம்மைப் போலவே இருந்திருக்கும் என்றும், அவை பல வேர்முனைகளைப் (பல சிறிய மூளைகளை) பெற்றிருப்பதால், அவற்றை நாம் வெட்டும்போதோ, தாக்கும்போதோ அவற்றால் நகராமலே வலியைத் தாக்குப்பிடிக்க முடிகிறது என்கிறார்.
  தாவரங்களால் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளவிட முடியும், அவற்றால் மின்புலத்தையும், காந்தப்புலத்தையும் கூட அளவிட முடியும் என்கின்றனர்.
  நன்றி....

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download