பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish

பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish 


      இவ்வுலகிலுள்ள எளிய ,மெல்லிய உடலமைப்பைக் கொண்ட உயிரினங்கள் தங்களைப் பாதுகாக்க சிறப்பான பண்புகளைப் பெற்று பரிணாமமடைந்துள்ளன.
     அந்த வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் தான் நாம் பார்க்கப்போகும் ஜெல்லி மீன்.

தனிப்பண்புகள்:

    இது பார்ப்பதற்கு மிக  அழகாக தோன்றினாலும் கொடிய விஷமுள்ள விலங்காகும்.இது உண்மையில் ஒரு மீனினம் அல்ல.

   இதில் 2000 வகைகள் உள்ளன.இந்த ஜெல்லி மீன்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது.
   இவற்றிற்கு மூளை என்பது கிடையாது.ஆனால் நரம்புமண்டலம் உள்ளது.இது ஒளி, மணம், அழுத்தம் பிறவற்றை உணரும் உணர்கொம்புகளைப் பெற்றுள்ளது.
  இதன் மொத்த உடல்பகுதி 95% நீராலானது. 5%மட்டுமே திடப்பகுதியாகும்.
   இவை மற்ற உயிரினங்களை விட வித்தியாசமான வளர்ச்சி முறை கொண்டவை.இதை  பார்க்கவும்  jelly fish reproduction

  சிறப்புப்பண்புகள்:

    இவற்றில் எலும்புகள், தசைகள் போன்ற கடினமான பகுதி எதுவும் இல்லை.ஆனால் இவை தங்களை பாதுகாக்க நச்சுத்தன்மையை பெற்றுள்ளன.
இவற்றில் விழுதுகள் போன்ற நூலிழைகள் போன்ற அமைப்புகள் ஏதாவது உயிரினத்தின் மேல் பட்ட மறுகணமே, அந்த இழையில் உள்ள கொடுக்குகள் ,உயிரினத்தின் உடலில் விஷத்தை கண்ணிமைக்கும் நொடியில் செலுத்தி விடுகின்றன.இந்த விஷமானது உயிரினத்தை முற்றிலுமாக செயலிழக்க  செய்கிறது.
இந்த விஷமானது மனிதனைக் கொள்ளும் அளவிற்கு வலிமை வாய்ந்தது.

  
    இந்த கொடுக்குகளை இவை இரையைப் பிடிக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
   அமைதியாக மிதந்து செல்லும் இதனருகே சிறு மீன் போன்ற ஏதேனும் ஒரு உயிரினம் இதன் உணர்கொம்புகளில் பட்டுவிட்டால் போதும் இது உடனே கொட்டு நூல்களை வெளியே வீசி இரையை காயப்படுத்தி சிக்க வைத்துவிடும்.இதற்கு பிரத்யேகமான செரிமான அமைப்பு கிடையாது.
எனவே இவை பிடித்த இரையின் ஊட்டச்சத்துக்களை gastrodermis என்னும் அமைப்பு வழியாக உறிஞ்சிக்கொள்கின்றன.
பின் தேவையில்லாத பாகங்களை வீட்டுவிடுகின்றன.

       ஜெல்லி மீன் தாக்கி பல மனிதர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.இதன் விஷம் முப்பது நொடிகளுக்குள் மனிதனைக் கொள்ளும்.
      ஜெல்லி மீன்களினால் பாதிக்கப்பட்ட ஒரு சூழ்நிலை மண்டலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை.

      ஜெல்லி மீன்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு நீர் நிலையில் ஒரு மீனினம் கூட உயிர் வாழ முடியாது.

மேலும் காண்போம்....




Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download