பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம்-1 - Humming Birds - ஹம்மிங் பறவை
பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம்-1 - Humming Birds
பரிணாம வளர்ச்சியின் விளைவாக பல அதிசய உயிரினங்கள் தோன்றியுள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
முதலாவதாக நாம் பார்க்கப் போகும் உயிரினம் "ஹம்மிங் பறவை" ஆகும்.
சிறப்புப்பண்புகள்:
ஹம்மிங் பறவைகள் என்றழைக்கப்படும் இப்பறவைகள் பரிணாம வளர்ச்சியின் அற்புத படைப்பாகும். இப்பறவைகள் தேனீக்களை போல பூவில் உள்ள தேனை உண்கின்றன.இதன் மூலம் மகரந்தசேர்க்கைக்கும் உதவுகின்றன.
மேலும் இவை காற்றில் மிதந்தபடியே பூவில் தேனை உண்ணும் திறமை உடையது. இப்பறவை நொடிக்கு 60-80 முறை தன் இறக்கைகளை அடித்துவிடும். இவற்றின் பெரும்பாலான ஆற்றல் இதன் இறக்கைகளுக்கே செல்கிறது.
இதன் அலகுகள் தேனை உண்பதற்கேற்ப நீளமாக பரிணாம மாற்றம் பெற்றுள்ளது.மேலும் இதன் நாக்கும் தேனை உறிஞ்சுவதற்கேற்ப மாற்றமடைந்துள்ளது.
மேலும் ஒரு சில மலர்களில் தேன் சுரப்பிகள் உள்பகுதியில் அமைந்திருக்கும். அந்த பூக்களில் தேனீக்கள், பூச்சிகளால் தேனை உண்ண முடியாது.எனவே அந்த தாவரங்களுக்கு பூச்சிகள் மூலம் மகரந்தசேர்க்கை நடைபெறாது.ஆனால் நீண்ட அலகைப் பெற்ற ஹம்மிங் பறவைகளால் இம்மலர்களில் உள்ள தேனை உண்ண முடியும். எனவே அந்த மலர்கள் மகரந்தசேர்க்கைக்காக இப்பறவைகளையே சார்ந்திருக்கின்றன.
இந்தப் பறவையின் மூளையின் எடை இதன் மொத்த உடல் எடையில் 5% ஆகும்.
தனிப்பண்புகள்:
இப்பறவைகள் 2 கிராம் எடையும் 5 செ.மீ மட்டுமே நீளம் உடையது. இப்பறவைகளின் எடை குறைவாக இருப்பதால் இவற்றால் எளிதாக காற்றில் மிதக்க முடிகிறது.
இப்பறவைகளில் ஆண் பறவைகள் ,பெண்பறவைகளை ஈர்ப்பதற்காக அழகிய வண்ணங்களுடனும், அழகான தோற்றத்தையும் பெற்றிருக்கும்.
ஆண்பறவைகள் ,பெண்களை கவர்வதற்கு காற்றிலேயே வட்டமடிக்கின்றன.மேலும் காற்றிலே நடனமாடுகின்றன.
இப்பறவைகள் பெரும்பாலான உணவு தேன் தான் இருப்பினும் இவை புரதசத்திற்காக சிறு பூச்சிகளையும் உண்கின்றன.
இவை பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடிக்கும் பண்புடையவை.
இப்பறவைகள் பறக்கும்போது ஒருவிதமான ஹம்மிங் சத்தம் ஏற்படுவதால் இதற்கு ஹம்மிங் பறவை என்னும் பெயர் வந்தது.
இப்பறவைகள் பறக்கும்போது ஒருவிதமான ஹம்மிங் சத்தம் ஏற்படுவதால் இதற்கு ஹம்மிங் பறவை என்னும் பெயர் வந்தது.
co-evolution: ஹெலிக்கோனியா மலர்கள்
ஹெலிக்கோனியா மலர் என்ற ஒருவகை மலர்களைக் கொண்ட தாவரங்களும், வளைந்த நீண்ட அலகினைக் கொண்ட ஒருவகை ஹம்மிங் பறவைகளும் இணை பரிணாம வளர்ச்சியைப் (co -evolution) பெற்றுள்ளன.
இந்தவகை தாவரங்களின் மகரந்தசேர்க்கை இந்தவகை ஹம்மிங் பறவைகளால் மட்டுமே நடைபெறும். ஏனெனில் இம்மலர்களின் அமைப்பு வளைந்து, மகரந்தத்தாள்கள், சூலகம் போன்றவை மலரின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. இதனால் மற்ற தேனீக்கள், பூச்சிகளால் அதை அடைய முடியாது.
எனவே இம்மலர்களுக்கு ஏற்றது போல் வளைந்த நீண்ட அலகினைக் கொண்ட பறவைகளால் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறும்.
இந்த வளைந்த அலகினைக் கொண்ட ஹம்மிங் பறவைகள் அழிந்துவிட்டால் ,இந்த தாவரமும் அழிந்துவிடும்....
மேலும் தகவலிற்கு...click here
தொடர்ந்து காண்போம்....

Comments
Post a Comment