பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish
பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish இவ்வுலகிலுள்ள எளிய ,மெல்லிய உடலமைப்பைக் கொண்ட உயிரினங்கள் தங்களைப் பாதுகாக்க சிறப்பான பண்புகளைப் பெற்று பரிணாமமடைந்துள்ளன. அந்த வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் தான் நாம் பார்க்கப்போகும் ஜெல்லி மீன் . தனிப்பண்புகள்: இது பார்ப்பதற்கு மிக அழகாக தோன்றினாலும் கொடிய விஷமுள்ள விலங்காகும்.இது உண்மையில் ஒரு மீனினம் அல்ல. இதில் 2000 வகைகள் உள்ளன.இந்த ஜெல்லி மீன்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. இவற்றிற்கு மூளை என்பது கிடையாது.ஆனால் நரம்புமண்டலம் உள்ளது.இது ஒளி, மணம், அழுத்தம் பிறவற்றை உணரும் உணர்கொம்புகளைப் பெற்றுள்ளது. இதன் மொத்த உடல்பகுதி 95% நீராலானது. 5%மட்டுமே திடப்பகுதியாகும். இவை மற்ற உயிரினங்களை விட வித்தியாசமான வளர்ச்சி முறை கொண்டவை.இதை பார்க்கவும் jelly fish reproduction சிறப்புப்பண்புகள்: இவற்றில் எலும்புகள், தசைகள் போன்ற கடினமான பகுதி எதுவும் இல்லை.ஆனால் இவ...