மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships

மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships

பரிணாம வழி உறவுகளைக் கண்டறிய செய்யப் பட்ட ஆய்வுகள்:

சோதனை 1:

       முதலில் மனிதனின் இரத்தம் மாடப்புறாக்களுக்கு செலுத்தப் பட்டது.புறா இறந்துவிட்டது.
       கோழியின் இரத்தம் முயல்களுக்கு செலுத்தப் பட்டது.முயலும் இறந்துவிட்டது.




      இச்சோதனை மூலம் இரத்தத்தைப் பெற்ற உயிரினங்களுக்கு இடையே எவ்வித உறவும் இல்லை என்பது தெளிவாகிறது.

சோதனை 2:

       குதிரையின் இரத்தம் கழுதைக்கு செலுத்தப்பட்டது.கழுதை சாகவில்லை.


      




     முயலின் இரத்தம் குழிமுயலுக்கு செலுத்தப்பட்டது.குழிமுயல் சாகவில்லை.
    இது இவ்விலங்குகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

மனிதனின் உறவு:

    மனிதனின் இரத்தமும் மனிதக் குரங்காகிய சிம்பன்சியின் இரத்தமும் உடலியல்,வேதியியல் பண்புகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர்.

   சிம்பன்சியின் இரத்தத்திலும் மனிதனின் இரத்ததைப் போலவே O ,A ,B ,AB  என்ற நான்கு பிரிவுகள் உள்ளன.
   மனிதனின் 'O' வகை இரத்தம், 'O' இரத்தத்ததை உடைய சிம்பன்சிக்கு செலுத்தப்பட்டது.
   சிம்பன்சி தெளிவுடன் இருந்தது.
   இந்த ஆய்வு மனிதனும் சிம்பன்சியும் ஒரே மூதாதையிடமிருந்து வந்தவர்கள் என்றும், இவர்களுக்கிடையே உறவு உள்ளது என்பதையும் நிரூபிக்கிறது.

நன்றி...
                                                                                                     - மேலும் காண்போம் 



Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download