மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships
மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships பரிணாம வழி உறவுகளைக் கண்டறிய செய்யப் பட்ட ஆய்வுகள்: சோதனை 1: முதலில் மனிதனின் இரத்தம் மாடப்புறாக்களுக்கு செலுத்தப் பட்டது.புறா இறந்துவிட்டது. கோழியின் இரத்தம் முயல்களுக்கு செலுத்தப் பட்டது.முயலும் இறந்துவிட்டது. இச்சோதனை மூலம் இரத்தத்தைப் பெற்ற உயிரினங்களுக்கு இடையே எவ்வித உறவும் இல்லை என்பது தெளிவாகிறது. சோதனை 2: குதிரையின் இரத்தம் கழுதைக்கு செலுத்தப்பட்டது.கழுதை சாகவில்லை. முயலின் இரத்தம் குழிமுயலுக்கு செலுத்தப்பட்டது.குழிமுயல் சாகவில்லை. இது இவ்விலங்குகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது என்பதைக் காட்டுகிறது. மனிதனின் உறவு: மனிதனின் இரத்தமும் மனிதக் குரங்காகிய சிம்பன்சியின் இரத்தமும் உடலியல்,வேதியியல் பண்புகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர்...