Posts

Showing posts from May, 2019

DNA is Acting as a Memory - நினைவகமாக செயல்படும் DNA

Image
DNA is Acting as a Memory - நினைவகமாக செயல்படும்  DNA            DNA வில் தகவல்களை சேகரிக்கலாம் என்பதும் ,அது தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் நமக்கு தெரியும்.      ஆனால் DNA  இயற்கையாகவே ஒரு genetic memory யாக செயல்படுகிறது. இது தாய் தந்தையரின் மரபுப் பண்புகளை அதன் தலைமுறைகளுக்கு கடத்துகிறது. ஒரு குழந்தையின் DNA வில் அதற்கு முந்தைய அத்தனை தலைமுறைப் பண்புகளும் இருக்கும்.   ஒரு குழந்தையிடத்தில் அவனது தாத்தாவின் குணம் வெளிப்படுவது இதனால் தான்.   மேலும் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய புதிய பண்புகளை நினைவாக பெறுவதால் அடுத்து தோன்றும் தலைமுறை முன்னேற்றமடைந்ததாக தோன்றுகிறது.      மேலும் இந்த  genetic memory  ஆனது தலைமுறைப் பண்புகளை மட்டுமன்றி பரிணாமத் தகவல்களையும் கொண்டிருக்கும்.இது பரிணாமத்தில் முக்கிய பங்காற்றுகிறது.இது பரிணாமத்தில் ஒரு உயிரினம் வந்த வழியை நினைவாக சேமித்து வைக்கிறது.இது பரிணாமம் பின்னோக்கி செல்லாமல் எப்போதும் முன்னோக்கியே செல்வதற்கு வழ...

பரிணாமத்தின் பொருள் - The Real Meaning Of Evolution

Image
பரிணாமத்தின் பொருள் - The Real Meaning Of Evolution         பரிணாமம் என்பது என்ன? உயிரினங்கள் மட்டும் தான் பரிணாம வளர்ச்சி பெருகின்றனவா? உண்மையில் பரிணாமத்தின் அர்த்தம் என்ன?   பரிணாமம் என்பது வளர்ச்சியைக் குறிக்கும். ஆனால் மேம்பாட்டைக் குறிக்காது.  ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட உயிரினங்கள் மட்டுமே தோன்றும் என்று கூறிவிட முடியாது. மேலும் அது எப்போதும் சீராகவே  நடப்பதில்லை. உதாரணமாக நீரிலிருந்து நிலத்தை அடைந்து வாழ்ந்த உயிரினங்கள் மீண்டும் நிலத்தை அடைந்த பரிணாமம் .   பரிணாமம் என்பதற்கு திருந்தியமைதல்  என்றும் அர்த்தம் உண்டு. பழைய நிலையில் உள்ள ஒரு உயிரினம், புதிய நிலைக்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்படுவதாகும்.  இதற்கு உதாரணமாக மனிதனின் கலாச்சார பரிணாமத்தை (cultural evolution) குறிப்பிடலாம்.ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும் இன்று வாழும் மனிதனுக்கும் இடையில் ஏற்பட்ட முன்னேற்றம்.     பரிணாமம் என்பது எல்லாவற்றிற்கும் பொதுவானது.அது காலப்போக்கில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கிறது...

பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?

Image
பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?     பரிணாம வளர்ச்சி என்பது இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. பூமியும் பரிணாம வளர்ச்சி அடைந்துவந்துள்ளது.        பூமியின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பித்தது தான் உயிர்களின் பரிணாமம்.        அத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்று நம்மால் காண முடியாது. மேலும் பரிணாமம் மிகமிக மெதுவாக நடைபெறும் ஒரு செயல்பாடாகும். அது எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.      அதன் மாற்றம் எப்பொழுது வெளிப்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.      மேலும் அது உடலில் மட்டும் ஏற்படும் மாற்றமல்ல.மரபில்( gene )  ஏற்படும் மாற்றமாகும். அந்த மாற்றம் ஒரு உயிரினத்தின் எத்தனையாவது தலைமுறையில் வெளிப்படும் என்று கூற முடியாது.     ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் பரிணாமத்துடன் ஒப்பிடும் போது மிகமிக குறைவு. எனவே ஒரு மனிதனால் பரிணாமம் நடைபெறுவதைக் காண்பது என்பது சாத்தியமில்...