பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி

      பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களில் அடுத்தடுத்த தலை முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும் .
பரிணாமத்தைப் பற்றி  பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கியுள்ளனர்
.  அவர்களில் சார்லஸ் டார்வின் மற்றும் லாமார்க் முக்கியமானவர்கள்.
பரிணாமத்தைப் பற்றிய சிக்கலான விஷயம் என்னவென்றால் அது நடைபெறுவதை நாம் கண்ணால் காண முடியாது உறுதிப் படுத்தவும் முடியாது.அதை யூகிக்க மட்டுமே முடியும் .

       இந்த பரிணாம வளர்ச்சியானது பூமி தோன்றி சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய முதல் உயிரினத்திலிருந்து ஆரம்பமாகியது.இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
.
இவ்வாறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரிணாம வளர்ச்சியை எவ்வாறு யூகிக்க முடியும்?

       பரிணாமவியல் அறிஞர்கள் புதை படிம ஆதாரங்கள்(fossil records),கருவியல் ஆதாரங்கள்(embryological evidences),மூலக்கூறியல்  ஆதாரங்கள்(molecular evidences),புறத்தோற்ற ஆதாரங்கள்(homologous structures) மூலம் யூகிக்கின்றனர்.
இத்தகைய ஆதாரங்கள் அவர்களின்  பரிணாமம் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதாகவே உள்ளன.இருப்பினும் எதுவும் முழுமை அளிப்பதாக இல்லை.

பரிணாமத்தைப் பற்றிய கருத்துக்கள்
  பரிணாமத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களும் கோட்பாடுகளாகவே உள்ளன.அதில் "இயற்கைத்தேர்வுக் கோட்பாடு" பலரால் நம்பப்படுகிற, ஏற்றுக்கொள்ளப் படுகிற கோட்பாடாகும். அதை முன்மொழிந்தவர் சார்ல்ஸ் டார்வின் எனும் இயற்கையியல் அறிஞர்.....

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download