பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களில் அடுத்தடுத்த தலை முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும் . பரிணாமத்தைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கியுள்ளனர் . அவர்களில் சார்லஸ் டார்வின் மற்றும் லாமார்க் முக்கியமானவர்கள். பரிணாமத்தைப் பற்றிய சிக்கலான விஷயம் என்னவென்றால் அது நடைபெறுவதை நாம் கண்ணால் காண முடியாது உறுதிப் படுத்தவும் முடியாது.அதை யூகிக்க மட்டுமே முடியும் . இந்த பரிணாம வளர்ச்சியானது பூமி தோன்றி சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய முதல் உயிரினத்திலிருந்து ஆரம்பமாகியது.இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . இவ்வாறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரிணாம வளர்ச்சியை எவ்வாறு யூகிக்க முடியும்? பரிணாமவியல் அறிஞர்கள் புதை படிம ஆதாரங்கள்(fossil records),கருவியல் ஆதாரங்கள்(embryological evidences),மூலக்கூறியல் ஆதாரங்கள்(molecular evidences),புறத்தோற்ற ஆதாரங்கள்(homologous structures) மூலம் யூகிக்கின்றனர். இத்தகைய ஆதாரங்கள் அவர்...